இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி நான்கு சதவீதத்திற்கு மேலதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உருக்கு உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள், அடிப்படை இருப்பு உற்பத்திகள் போன்ற துறைசார்ந்த கைத்தொழில்கள், கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.