சேதமாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 2018 மார்ச் 31 வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதி நாளையுடன்(31) முடிவடைவதாக இலங்கை மத்திய வங்கி முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்த காலப்பகுதியை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் வரை காலநீடிப்பு செய்வதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.