இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாநாடுகளில் பங்கேற்கும் வகையில் வெளிநாடு செல்லும் போது, அங்கு வைத்து கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றினால் இதற்கான இரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியா, ஜெர்மன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, ஸ்பெயின் உட்பட சர்வதேச பல்கலைக்கழகம் மாநாடு நடைபெறும் 10 நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளை சேர்ந்த மாநாட்டு இயக்குநர்களிடம் குறித்த அமைப்பினால் போலியான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் இராணுவ அதிகாரிகளை கைது செய்யுமாறு அந்த நாடுகளின் வழக்கு இயக்குநர்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு சட்டத்தரணிகளின் ஆதரவை இந்த அமைப்பு பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.