இராணுவத்தை காட்டிக்கொடுக்கவே பான் கீ மூனின் வருகை – உடனே அவரை வெளியேற்ற வேண்டும்!
ஐ.நா சபை செயலாளரின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பில் தேசிய சுதந்திர முன்னணி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்.
மேலும் ஐ.நா சபை செயலாளர் நாட்டையும், இராணுவத்தினையும் சர்வதேசத்தின் முன்பு காட்டிக்கொடுப்பதற்காகவே இலங்கை வந்துள்ளார். இதற்கு ஆதரவாக மைத்திரியும் மஹிந்தவும் செயற்படுகின்றார்கள் எனவும் போராட்டத்தில் குற்றம் சுமத்தினார்கள்.
இதேவேளை அமெரிக்காவின் தலையீட்டில் பல நாடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களுக்கு இலங்கையை அடிமைப்படுத்தவே அரசு செயற்படுகின்றது இதற்காகவே இலங்கைக்கு பான் கீ மூன் வந்துள்ளார்.
அவர் வடக்கு கிழக்கிற்கு மட்டும் சாதகமானவர், அவரினால் இராணுவம் காட்டிக்கொடுக்கப்படும் அதன் காரணமாக அவரை உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து தேசிய சுதந்திர முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டது.