இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறும் காணாமல் போனோர் அலுவலகம்!
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகமானது அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இதனை தெரிவித்துள்ளார். பொரளையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இராணுவத்தை அச்சுறுத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமே குறித்த அலுவலகம்.
இந்த அலுவலகமானது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கீழ் இல்லாமல் அதிகாரங்களை மீறி செயற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.