இரவு ஆடை, வெறும் காலுடன் வீதியில் அலைந்த தமிழ் வயோதிப பெண்.பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கனடா- 80வயது மதிக்கத்தக்க தமிழ் பெண் ஒருவர் மார்க்கம், ஒன்ராறியோ பகுதியில் தனியாக அலைந்து திரிந்துள்ளார்.
வெறும் காலுடனும், பிறவுன் நிற இரவு ஆடையுடனும் காணப்பட்ட இவரை அடையாளம்காட்ட உதவுமாறு பொலிசார் பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்.
மக்கோவான் வீதி மேற்கில் ரவுன்லி அவெனியு மற்றும் ஹைகிளென் அவெனியு பகுதியில் காலை 9மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.
இவரது படம் பொலிசாரிடம் இல்லை ஆனால் இவரது பெயர் புவனேஸ்வரி என தெரிவித்தனர்.
அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
எங்கிருந்து வந்தார் என அறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்கம் பகுதியில் வியாழக்கிழமை வெப்பநிலை கிட்டத்தட்ட -10C