இரண்டு பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்: பிரித்தானியாவில் நடந்த கோரதாண்டவம்
பிரித்தானியாவில் இரண்டு பொலிசாரை 30 பள்ளி மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் மாகாணத்தில் உள்ள நியூ கிராஸ் பகுதியில் ஆண் பொலிசாரும், பெண் பொலிசாரும் வழக்கம் போல் ரோந்து பணிக்காகச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் தன்னுடைய பையில் கத்தி வைத்திருப்பதை ஆண் பொலிசார் ஒருவர் கண்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வார்த்தை போர் முற்றியதால் பொலிசார் அவரை தாக்கிதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் பள்ளிக்கு அருகில் நடந்ததால் இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர் அந்த பொலிசாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோந்துக்கு சென்ற பெண் பொலிசார் இதை தடுக்க முற்பட்ட போது அவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மற்றொரு பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி அதன் பின் அவரை மீட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அதன் பின் சந்தேகிக்கப்பட்ட மாணவரை பொலிசார் உடனடியாக தங்களுடைய பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.