இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் 3000 வருடங்கள் பழமையான கல்லோவியங்கள்
இயேசு கிறிஸ்து காலத்திற்குரியதாக நம்பப்படும் 3000 வருடங்களுக்கு முற்பட்ட கல்லோவியங்கள் எகிப்தின் சகாரா பாலைவனத்தை அண்டிய குகை ஒன்றினுள் தற்போது மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2005 ஆம் ஆண்டு இத்தாலியின் அருங்காட்சியக இயக்குனர் மார்க்கோ மொரல்லியினால் கில்ப் கெபிர் பீடபூமி மற்றும் நைல் நதியிற்கிடையிலான நிலங்களில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த, சகாரா பாலைவனத்தின் சிவப்பு மலைப்பகுதியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பதான கல்லோவியங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ் ஓவியங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ள மொரல்லி குறிப்பிட்டுள்ளதாவது, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் குழந்தை மகப்பேற்றை குறிப்பதான குறிப்புகளை வெளிப்படுத்தும் ஓவியமாகவே அது அமையப்பெற்றுள்ளது. அது குழந்தை, தாய், தந்தை என்போரோடு சூழ நிற்கும் விலங்குகளையும் குறிப்பிடுகிறது. நிச்சயமாக அது 3000 வருடங்களுக்கு முன்புள்ள கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் ஓவியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.