மேயாத மான் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் தனுஷ்.
நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட தனுஷ் யார் படம் வந்தாலும் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவிப்பார்.இந்நிலையில் அவர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்த மேயாத மான் படத்தை பார்த்துள்ளார். தீபாவளி அன்று ரிலீஸான மேயாத மான் படத்தை பார்த்த பிறகு தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இப்படி ஒரு படத்தை பார்த்து சிரிச்சு ரொம்ப நாளாகிவிட்டது. நட்பு, ஒருதலை காதல், நண்பனின் சகோதரி…சில ஃபார்முலாக்கள் எப்பொழுதுமே வெற்றி பெறும். வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.