பாராளுமன்றம் இன்று (06) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாவது கட்ட வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இதற்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.