தேசிய ஓய்வூதிய தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது.
அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை பாராட்டுவது இன்றைய தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இம்முறை தேசிய ஓய்வூதிய தினம் தீவு தழுவிய விதமாக 9 மாகாணங்களிலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 5 லட்சத்து 95 ஆயிரத்து 607 பேர் காணப்படுவதாக அரச ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.