இனிமேல் வாட்ஸ் அப் கிடையாது! அதிகாரபூர்வ அறிவிப்பு- அதிர்ச்சி தகவல்
தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால் தான் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Symbian Operating System கொண்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது.
இந்த வகை போன்களில் தொழில் நுட்ப வசதி இல்லை. அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Symbian Operating System கொண்ட போன்கள், பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ் 40, நோக்கியா எஸ் 60 , ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 , விண்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய போன்களில் வாட்ஸ் அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.