இனிமேல் பூந்து விளையாடுங்க..! பேஸ்புக் அப்பில் கலக்கலான புதிய வசதி
பேஸ்புக்கின் மெசேஞ்சர் அப்பில் (Facebook Messenger) பிடித்தவர்களுடன் உரையாடிக் கொண்டே அவர்களின் முகம் பார்த்து Video Calls பேசுவதற்கு ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக்கின் மெசேஞ்சரில் Video Calls வசதி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் Text செய்து கொண்டே Video Calls பேச முடியாது.
இந்த நிலையில் புதிய வசதியாக “instant video” என வசதி அந்த அப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிடித்தவர்களிடம் Video Calls பேசிக் கொண்டே, மற்றவர்களிடம் Text செய்து பேசிக் கொள்ள முடியும்.