இந்திய ரூபாய் நோட்டு விவகாரம்: கடும் சிக்கலில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்
ரூபாய் நோட்டு விவகாரத்தால் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சென்று 18 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு வழங்கவேண்டிய தினசரி படித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்திய உச்சநீதிமன்றம் நடப்பு டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.58.6 லட்சம்(இந்திய மதிப்பில் தோராயமாக) ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான தினசரி வழங்கப்பட வேண்டிய படி சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அவர்களுக்கு தினசரி வழங்கப்படும் செல்லக்கூடிய ரூபாய் நோட்டுகள் எண்ணிகையும் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தினசரி செலவுகளுக்காக அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் தலா ரூ.4,200 வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.