இந்திய சவாலுக்கு நாங்கள் ரெடி!
இந்நிலையில் நியூசிலாந்து அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற பின் ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. இத்தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்தியா வந்துள்ளது.
மேலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நாம் தயார் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
இத்தொடர் குறித்து வில்லியம்சன் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகவும் கடுமையாக சவாலாகத்தான் அமையும். இருப்பினும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அணித்தலைவராகவும், ஒரு துடுப்பாட்ட வீரராகவும் இதை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்.
இரண்டு பொறுப்புகளையும் சுமப்பது எளிதானதல்ல, ஆனால் பொறுப்புகள் அதிகரிக்கும் போது தான் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லியும் என்னைப்போலத்தான்.
அவர் தற்போது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவது சிறப்பான ஒன்று. அவரது விளையாட்டை நான் மிகவும் விரும்பி பார்பேன். இந்திய அணியில் அவரைத்தவிர்த்து திறமையான வீரர்களும் உள்ளனர். அதனால் எங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடுவோம் என வில்லியம்சன் கூறியுள்ளார்.