அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்துள்ளார்சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய டிரம்ப், இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று விமர்சித்திருந்தார்.
இதன் அடுத்த நடவடிக்கையாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்பதை ரத்து செய்துள்ளது. இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
துருக்கிக்கும் அமெரிக்கா சில வர்த்தக தடைகளை நிறைவேற்றியுள்ளது.ஹார்லிடேவிட்சன் பைக்கிற்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது