இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதல்: பொண்டிங் அறிவித்த பலமான அவுஸ்திரேலிய அணி
இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங் தெரிவு செய்துள்ளார்.
அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அவுஸ்திரேலிய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், தலைவருமான ரிக்கி பொண்டிங் தனது அவுஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளார்.
ரிக்கி பாண்டியின் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்
- டேவிட் வார்னர்
- ரென்ஷா
- கவாஜா
- ஸ்மித்
- ஹேண்ட்ஸ்காம்ப்
- மிட்செல் மார்ஷ்
- மாத்யூ வடே
- மிட்செல் ஸ்டார்க்
- ஸ்டீவ் ஓ’கீபே
- ஹசில்வுட்
- நாதன் லயன்
- ஷேன் மார்ஷ்
- ஜேக்சன் பேர்டு
- கிளென் மேக்ஸ்வெல்
- ட்ராவிஸ் ஹெட்
- ஆஷ்டோன் அகர்
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23ம் திகதி தொடங்குகிறது.