இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் உருவாகி வருகிறது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இந்த மைதானத்தை இடித்து கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதன்மூலம் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும், தொடர்ந்து பார்க்கிங் வசதி, குளிர்சாதன பெட்டிகளை அமைக்கும் வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைகள் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும் என குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.