இங்கிலாந்து அணிக்கு சவால் காத்திருக்கிறது: மெக்ராத்
தற்போது உள்ள இந்திய அணி இங்கிலாந்து சென்றால், அந்நாட்டு அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கும் என அவுஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மெக்ராத் சென்னையின் MRF Pace Foundation ல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்திய அணி மேற்கிந்திய தொடரை வெற்றிகரமாக முடித்தது குறித்து அவரிடம் கேள்வி கேட்கபட்டது.
இதற்கு அவர் கூறியதாவது, மேற்கிந்திய தீவு அணி சிறந்த டெஸ்ட் அணி கிடையாது, ஆனால் டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடகூடிய அணி.
இத்தொடரில் விராட்கோஹ்லி சிறாப்பாக செயல் பட்டார். அதிக அளவு ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கும் உதவினார் என கூறினார்.
மேலும் தற்போது உள்ள இந்திய அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள காரணத்தினால் தான் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட முடிந்தது.
தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து சென்று விளையாடினால் உண்மையான சவால் இங்கிலாந்து மற்று நியூசிலாந்து அணிக்கு காத்திருக்கும் என கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.