ஆஷஸ் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி! – ஒப்புதல் வழங்கிய இங்கிலாந்து
ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகலிரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்டை பகல்-இரவாக மின்னொளியின் கீழ் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவுஸ்திரேலியாவில் இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்ட இந்த இரண்டு டெஸ்டும் வர்த்தக ரீதியிலும், நேரில் கண்டுகளித்த ரசிகர்களின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அத்தோடு விரைவில் பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவுடன் பகல்-இரவு டெஸ் போட்டிகளில் வியைளாட உள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது இங்கிலாந்தும் பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
அனேகமாக பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் நடைபெறலாம், போட்டி அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.