வட மாகாணத்தில் செயற்படும் “ஆவா” எனப்படும் பாதாள கும்பலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகச் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர்;
வட மாகாணத்தில் செயற்படும் “ஆவா” எனப்படும் பாதாள கும்பல் மீண்டும் தமது நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. என்றாலும் எந்த வகையிலும் ஆவா” கும்பலுக்கு மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களில் இது தொடர்பான 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
யாழில் மத்திரமின்றி தெற்கில் செயற்படும் பாதாள கும்பல்களை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மறைந்திருந்து பாதாள உலகை இயக்கும் பாதாள உலகின் தலைவர்கள் மறைந்திருக்கும் இடங்களைக் கூட நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.