ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகும் இந்த டிடிவி தினரகன் யார்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் யார்? அவரது அரசியல் பின்னணி என்ன என்பது பற்றி பார்ப்போம்,
- டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர்.
- விகே சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதா மணியின் 3 மகன்களில் ஒருவர் டிடிவி தினகரன்.
- தினகரனின் இளைய சகோதரர் சுதாகரன் சில ஆண்டுகள், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தார்.
- கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தெரிவு செய்யப்பட்டார்.
- 2004 ஆம் ஆண்டுடன் மக்களவை எம்பி பதவி முடிவடைந்த நிலையில், மாநிலங்களவை எம்பியாகும் வாய்ப்பு கிடைத்தது.
- அதாவது, 2004 ஆம் ஆண்டிலேயே மாநிலங்களை எம்பியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சியிலும் ஜெயலலிதா காலத்தில் பொருளாளராக பதவி வகித்துள்ளார்.
- 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுன் டிடிவி தினகரனும் ஒருவர்.
- இந்த இடைப்பட்ட காலத்தில், தான் சிங்கப்பூரின் குடிமகன் என தினகரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளாரான சசிகலா, தினகரனை கட்சியில் சேர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் துணைப்பொதுச்செயலாளர் பதவியும் கொடுத்துள்ளார்.
- கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.