பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா, பிக்பாஸ் இரண்டாவது ரன்னர்-அப்பாக வந்த ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க உள்ளார்.
கிரகணம் படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுக்கிறார் இளன். இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் மேக்கப் அழகி ரைசா வில்சன் நடிக்கிறாராம்.
கிரகணம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் புதுப்படத்திற்கு தயாராகிவிட்டார் இளன். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.
ஹரிஷ், ரைசா ஜோடி சேரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
சிந்துசமவெளி, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ முதலான படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் காட்டிய பிறகு தான் ஹரிஷ் கல்யாண் பிரபலமானார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாண் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரும், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்தவருமான பெங்களூரைச் சேர்ந்த மாடலான ரைசா சைமன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவ்வை தான் அப்ரோச் பண்ணினார்களாம். அவரோ கதையைக் கூட கேட்காமல் சம்பளம் அதிகம் கேட்டாராம். எனவே ஆரவ்வை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு ஹரிஷ் கல்யாணை கமிட் செய்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்துள்ளது.