வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் மூலமாக, ஆயுத விற்பனையில் ஈடுபடும் கனேடிய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதான சட்டமூலம் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சில ஆபிரிக்க நாடுகளுக்கு கனடா ஆயுத விநியோகம் செய்தமை தொடர்பிலான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டமையடுத்தே இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில், இந்த ஆயுத விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
அதன் படி இந்த விநியோகத்தில் ஈடுபடும் கனடாவில் உள்ள நிறுவம், தனி நபர், கனேடிய நிரந்தர குடியுரிமை பெற்றவர், கனேடியர், வெளிநாட்டில் உள்ள கனேடிய நிறுவனத்தில் பணி புரிபவர் என யாராக இருந்தாலும் அவர்கள் அனுமதியைப் பெறவேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
அத்துடன் கனேடிய மத்திய பொலிஸ்துறையும், கனேடிய எல்லை பாதுகாப்பு திணைக்களமும் இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தி, கண்காணிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.