அளுத்கம நகரில் நேற்று தங்க வர்த்தக நிலையம் ஒன்றில் ஆயுதங்களுடன் இருவர் நுழைந்து அங்கு இருந்து தங்க நகைககள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த நிலையில் உந்துருளியில் வந்தவர்களே கொள்ளையில் ஈடுபட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தொகை தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பனவே கொள்ளையடிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.