சில முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் சாரதி இன்றி செயற்படக்கூடிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறிங்கியுள்ளமை அறிந்ததே.
இந்நிறுவனங்களுள் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிலையில் குறித்த காரினை அமெரிக்காவில் பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இக் காரிற்கான வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தினால் சொந்தமாக தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்த காரினை பரிசோதிப்பதற்கான அனுமதியை கடந்த மாதம் அமெரிக்காவின் மோட்டார் வாகன திணைக்களம் ஆப்பிளிற்கு வழங்கியிருந்தது.
இதேவேளை குறித்த பரிசோதனை வெற்றிகரமாக இடம்பெற்றமை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.