பெண்கள் அதிகாரத்துவமிக்க பதவிகளில் பொறுப்பேற்கவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அண்மையில் ஆண்கள் அதிக சிக்கல்களுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டியும் உள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பொது விதியாகக் கொள்ள முடியாது எனினும் ஆண்களை விடப் பெண்களே அதிக செயல்திறன் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் பெண்கள் இயல்பாக பழகும் முறையே அதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் ஒபாமா கூறியிருந்தார்.