ஆட்சியை கைப்பற்ற நடந்த பிரபலமான 9 சதித்திட்ட தாக்குதல்கள்!
இப்படிப்பட்ட உள்நாட்டுப் போரால் (சதியால்), நடந்த ஆட்சிமாற்றங்கள், உலக வரலாற்றில் பல. அவை அரசியல் சதுரங்க விளையாட்டின் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது.
அவற்றில், ஒரு சில இரத்தம் சிந்தாத ஆச்சரியப்படத்தக்கவை. அப்படிப்பட்ட பிரபலமான 9 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.இதில் பெரும்பாலும் நாட்டின் ராணுவ பொறுப்புகளில் இருந்தவர்களே இந்த செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஹிட்லரின் நாசிகள் முயற்சி
ஹிட்லரின் சுயசரிதையான ‘மெய்ன் கேம்ப்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 1923இல் ஹிட்லர் 2,000 நாசிகளுடன் ஜேர்மன் அரசை கவிழ்க்க, அங்குள்ள பீர் மண்டபத்தை முற்றுகையிட்டார்.
துரதிர்ஷ்டவசமாக நாசிகள் முயற்சி, அப்போது முறியடிக்கப்பட்டது.ஜேர்மன் அரசு, ஆயுத பலத்தால் நாசிகளின் முற்றுகை நடவடிக்கையை சமாளித்து வெற்றிகண்டது. அப்போது நாசிகளுக்கு போதிய ஆயுதபலம் இல்லாததால், 16 நாசிகள் கொல்லப்பட்டதுடன் முற்றுகை முயற்சி பின்வாங்கப்பட்டது. ஹிட்லர் அந்த தவறில் மற்றவர்களின் பின்னால் மறைந்திருந்து செயல்பட்டுள்ளார்.
இருந்தும் அவர் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். என்ற செய்திவரை அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய போர்
வரலாற்றில் மிக மோசமான உள்நாட்டுப்போராக கருதப்படுகிறது. மாலியில் டுயாரக் அமைப்பை சேர்ந்த இராணுவ கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி அமடு டௌமனியின் டாவ்ரஸ் நிர்வாகத்துக்கு எதிராக நடத்திய போர்.
இது 1916ஆம் ஆண்டிலிருந்து வடக்கு மாலியின் சுதந்திரத்திற்காக குடியரசை மறுசீரமைப்பு செய்யக்கோரி, தொடர்ந்து அவ்வப்போது இரு பிரிவினருக்கும் நடந்துவரும் யுத்தமாகும்.
இதன் உச்சக்கட்டமாக 2012இல் நடந்தது. தலைநகரை மையப்படுத்தி நடந்த யுத்தத்தில், ஊடக நிலையங்களையும், ஜனாதிபதி அரண்மனையையும் பாதுகாத்துக்கொண்டதோடு பிரச்சினையையும் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும், இதில் 15,000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். 1,00,000 மக்கள் இடம்பெயர்ந்தனர்.
உக்ரைன் ஆரஞ்சு புரட்சி
உக்ரைனில் நவம்பர் 2004இல் இருந்து ஜனவரி 2005 வரை ஜனாதிபதி கீவை(Kiev) மையப்படுத்தி உக்கிரமான மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுதுமாக போராட்டம், சாலைமறியல், அணிவகுப்பு, அரசு நடவடிக்கைகளுக்கு கீழ்ப்படியாமையும் இருந்தது.
அதற்கு காரணம், ஜனாதிபதி தேர்தல், முறைகேடு, வாக்காளர் மிரட்டல், லஞ்சம் ஊழல் அடிப்படையில் நடந்ததாக இந்த போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனாலும், அதற்குமுன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர், காயப்பட்டனர்.
கிரீஸில் இராணுவ தளபதிகள் ஆட்சி
1967 முதல் 1974 வரை கிரீஸில் இராணுவ தளபதிகளின் ஆட்சி நடந்தது. அதனால், அது இருண்டகாலமாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. கிரீஸுக்கும் துருக்கிக்கும் பிரச்சினை உருவான நிலையில், இராணுவ தளபதிகள் கிரீஸ் மன்னரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினர்.
மன்னர் அதை தடுக்க எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. இப்போதும் அந்த மன்னர் உயிருடன் ஒரு சாதாரண மனிதராக வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை கைப்பற்றிய முஷாரப்
பாகிஸ்தானில் உள்நாட்டுப்போரில் ஆட்சியை கைப்பற்றுவது சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 6 முறை நடந்துள்ளது. அதில் 1999இல் இராணுவத் தலைவராக இருந்த முஷாரப் பாகிஸ்தான் அரசை கைப்பற்றினார். இது இரத்தம் சிந்தாத ஆட்சிக்கவிழ்ப்பாக இருந்தது.
அடுத்து 3 ஆண்டுகள் குடியரசு அமையும் வரை ஒரு சர்வாதிகாரியாக நாட்டை ஆண்டார்.
நெப்போலியன் போனபர்ட்
1700களின் பிற்பகுதியில் பிரான்ஸை 5 பேர் கொண்ட ஒரு குழு(Directory) ஆட்சிசெய்து வந்தது.
அது அந்த நாட்டின் இராணுவ பொறுப்பில் இருந்த நெப்போலியனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
மேலும், அந்த ஐவரில் இரண்டு பேர் நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்தனர். 1799இல் எகிப்தியன் ராணுவ முகாமிலிருந்து நாட்டுக்கு திரும்பிய நெப்போலியன் சக சதிகாரர்களையும் ஒன்று திரட்டி, பாரிஸுக்கு வெளியில் திட்டம் வகுத்தார்.
அதே ஆண்டின் நவம்பர் 10ஆம் திகதி திடீர் முற்றுகையால் ஆட்சியை அந்த ஐவர் மையத்திடம் இருந்து கைப்பற்றி, மூன்றுபேர் கொண்ட தூதரகத்தை அமைத்தார்.
அதன் பிறகு 1804இல் பிரான்ஸின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார். இது பிரஞ்சு புரட்சியின் நோக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு முதல் பிரஞ்சு பேரரசராக நெப்போலியன் ஆனார்.
லிபியாவை கைப்பற்றிய கடாபி
லிபியாவில் மன்னராட்சி நடப்பதை மேற்கு நாடுகள் ஆதரித்த போதும். கடாபி வெறுத்தார்.
படிப்பறிவில்லாத பெற்றோருக்கு பிறந்தவர். கடாபி பற்றி மனித மாமிசம் சாப்பிடுவது உட்பட பல கொடூர அடையாளங்கள் கூறப்படுகிறது.கடாபி 27 வயதில் ஜூனியர் இராணுவ அதிகாரியாக இருந்தபோது ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டார்.
லிபியா அரசர் ஐட்ரிஸ் உடல் நல ஓய்வு காரணமாக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். செப்டெம்பர் 1, 1969இல் கடாபி உட்பட 70 சதிகாரர்களை திரட்டிக்கொண்டு லிபியாவின் ட்ரிபோலி, மற்றும் பெங்காஸி நகரில் உள்ள ராயல் அரண்மனை மற்றும் அரசு முதன்மை கட்டடங்களை முற்றுகையிட்டார்.
இரண்டு மணிநேரத்துக்குள் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அரசரின் ஒரு மெய்க்காப்பாளரைத் தவிர யாருமே எதிர்க்கவில்லை.
இதனால், வெளிநாடு சென்ற அரசரும் பயந்து திரும்பவில்லை. லிபியா மக்கள் மிகமோசமான ஒரு ஆட்சியை சந்தித்தனர். கடாபி 2011இல் அமெரிக்க படையால் கொல்லப்பட்டார். அதற்கு முன் பல ஆண்டுகள் வேறு நாட்டில் தஞ்சமடைந்து தலைமறைவாக வாழ்ந்தார்.
துறவிகள் படுகொலை
துறவிகள் தினமாக, பொலிவியாவில் நடந்த இந்த படுகொலையை நினைவுகூர்கின்றனர். நவம்பர் 1, 1979இல் ஆல்பர்டோ நடுஸ்ச் புஸ்ச் தலைமையில் இராணுவ அடக்குமுறை நடந்தது. அதை எதிர்த்து ஐக்கிய வர்த்தக அமைப்பும் போராட்டக்காரர்களை திரட்டியது.
இந்த கெடுபிடியில் 200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேருக்குமேல் படுகாயம் அடைந்தனர். 125 பேர் மர்மமாக மாயமானார்கள். இது பொலிவிய வரலாற்றில் ஒரு சோகமான நாள்.
கியூபா புரட்சி
காஸ்ட்ரோ, மார்க்ஸிஸ்ட் கொள்கைகளை நாடுமுழுதும் அமல்படுத்த பலமுறை புரட்சிகரமான தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும், ஜூலை 26, 1953 வரை கியூபாவில் புரட்சிகள் வெடிக்கவில்லை எனலாம்.காஸ்ட்ரோ புரட்சி நாயகன் சேகுவேரா தலைமையில் 160 கிளர்ச்சியாளர்களை சாண்டியாகோவில் உள்ள மோன்கடோ படையையும் பாயமோவில் உள்ள படையையும் தாக்குவதற்காக அனுப்பினார்.
இந்த புரட்சியும் ஆட்சிக்கவிழ்ப்பு வகையை சேர்ந்ததுதான்.இன்னொரு நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய சேகுவேரா, உலகம் முழுதும் உள்ள இளைஞர்களால் மதிக்கப்படுகிறார். அவர் முகத்தை உடைகளிலும் சுவர்களிலும் உலகம் முழுதாக பார்க்க முடிகிறது.