ஆசிய டி20 போட்டி: வெற்றி பெற்ற இந்தியா…தோல்வியடைந்த இலங்கை
பெண்களுக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளது.
தாய்லாந்தில் உள்ள பாங்காங் நகரில் பெண்களுக்கான ஆசிய டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு மிதலி ராஜ்ஜின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கிய இலங்கை அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்உ 69 மட்டுமே எடுத்து 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தொடரில் இந்தியா பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.