அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தவர்கள் முன்பாக விழுந்த விமானம்
அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநில கடற்கரையில் சிறிய ரக விமானமொன்று அங்கு கூடியிருந்தவர்கள் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவர் காயமடைந்துள்ளனர்.
மிடில் தீவுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் இடம்பெற்ற மேற்படி விபத்தையடுத்து அதில் பயணம் செய்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் விமான சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்டனர்.
அவர்களில் தலையிலும் கால்களிலும் படுகாயங்களுக்குள்ளாகியிருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க விமானி உலங்குவானூர்தி மூலம் பண்டாபேர்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த ஏனைய இருவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.