அலெப்போ விமானத் தாக்குதல்
அலெப்போவில் முன்னெடுக்கப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் காரணமாக அண்மையில் விமானத் தாக்குதலுக்கு உள்ளான வைத்தியசாலை தொடர்பான காணொளிக்காட்சிகள் தற்போது இணையத்தளம் வழியாக பகிரப்பட்டு வருகின்றது.
இக் காட்சிகள் நேற்று (சனிக்கிழமை) அலெப்போ ஊடக மத்திய நிலையம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இக் காட்சிகளில், விமானத் தாக்குதலாக சேதமுற்ற வைத்தியசாலையின் இடிபாடுகள், நோயாளர்களின் நிலைமை, வீதியில் ஆங்காங்கே கிடக்கும் சடலங்கள் என தாக்குதலின் கோரத்தை காணமுடிகின்றது.
விமானத் தாக்குதலினால் குறித்த வைத்தியசாலை முழுவதும் சாம்பல்களும், புகைகளும் படிந்து அப்பகுதி முழுவதும் மாசடைந்த பகுதிபோன்று காணப்பட்டது.
இதேவேளை, உயிரிழந்துவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்பவர்கள் மற்றும், நோயாளிகள் என அனைவரும் சத்திர சிகிச்சைகளின் போது அணிகின்ற முகமூடிகளை அணிந்துள்ளதை குறித்த காட்சிகளில் காணமுடிகின்றது.
எவ்வாறான போதும், கிழக்கு அலெப்போவில் உள்ள வைத்தியசாலைகள் அனைகத்துமே தீவிரவாதிகளிற்கு எதிராக கடந்த சில நாட்களாக முனக்னெடுக்கப்பட்ட கடுமையான வான் தாக்குதலைத் தொடரந்து தற்போது மூடப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனரகம் மற்றும் உலக சுகாதார ஸ்தானம் ஆகியன தெரிவித்துள்ளன.