அர்னால்ட் படத்துக்கு இசையா? இளம் இசையமைப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்
அர்னால்ட் ஸ்வாசினேக்கர் யார் என்று அறிமுகம் தேவையில்லை. உலகமே அறிந்த பிரபல ஹாலிவுட் நடிகரான இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் ஆண்டனி மித்ரதாஸ் இயக்கவுள்ளார்.
103 வயதான இவர் இயக்கும் இப்படத்தில் மற்ற நடிகர்களும் ஹாலிவுட் நடிகர்கள் தான் நடிக்கவுள்ளனர். முதல் உலகப்போர் நடந்த சமயத்தில் பிறந்த இவர் அந்த போரை பற்றித்தான் இயக்கவுள்ளாராம்.
இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை பற்றிய அறிவிப்பு வரும் 20ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.