மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடைய பெரும் புள்ளி நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். அவர் எந்த நாட்டில் இருந்தாலும், யாருடைய தயவில் இருந்தாலும் சர்வதேச பொலிஸாரின் ஊடாக நாட்டுக்கு பிடித்து வந்து அவருக்குரிய தண்டனையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.