அருண் விஜய் குடிபோதையில் மோதியதற்கு காரணம் சுவாதியா?
என்னை அறிந்தால் படத்திற்கு மீண்டும் பிரபலமான நடிகர் அருண் விஜய் குடிபோதையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசார் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இதற்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண்விஜய் மது போதையில் காரை ஓட்டி பொலிசார் வாகனத்தில் மோதினார். இதையடுத்து பொலிசார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அருண்விஜய் இடித்த பொலிசார் வாகனம், சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை அழைத்து சென்ற வாகனம் என்றும், அருண் விஜய்யின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவி, பொலிசாரின் வாகனத்தை இடிக்க செய்ததாகவும் சிலர் சமூகவலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
சுவாதி வழக்கை மக்கள் நினைவில் வைத்திருக்கத்தான், ஆவி அப்படி செய்ததாகவும் வதந்தி பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சுவாதியின் ஆவி சுற்றி வருவதாக சிலர் கூறி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வதந்தியை சிலர் பரப்பிவிட்டுள்ளனர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?