அரச வெசாக் தின நிகழ்வுகள் நாளை கேகாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
2561ம் வெசாக் தின நிகழ்வுகள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு கேகாலை வட்டாரம அரஹத்த மலியதேவ விஹாரையில் நடைபெறவுள்ளது.
அரச வெசாக் வாரம் நேற்று மலியதேவ விஹாரையில் மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் நிமால் கொட்டபொலகெதர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 12ம் திகதி சர்வதேச வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.