அரச நிர்வாகத்தினை அடிமைப்படுத்திய தேரரை உடனே கைது செய்…!
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையினை கண்டித்து இன்றைய தினம் களுவாஞ்சிகுடியில் கிராம சேவகர்களினால்பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும், கிராமசேவை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரி களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமனரத்ன தேரரே நீ பிக்குவா? மொக்குவா? மக்களிடையே இனவாதத்தினை கக்காதே! அரச நிர்வாகத்தினை அடிமைப்படுத்திய தேரரை உடனே கைது செய்! பெளத்த மதத்தினை மதிக்கின்றோம். போன்ற கோசங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு விகாராதிபதி இனங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்தும் முகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.