மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட முனையுமாயின் அது பிரச்சினையையே ஏற்படுத்தும் எனவும் மல்வத்து பீட சங்க சபையின் போஷகர் நியங்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு நடவடிக்கையும் மகா சங்கத்தினரின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படுவதுதான் சம்பிரதாயமாகும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.