நாட்டிலுள்ள சில விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பில்லாத ஒரு நிலைமை காணப்படுவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவம் இருப்பது நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குமாகும். நாம் கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைத் தளபதியும், இன்னும் சிலரும் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போதைய பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையினால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க சதி செய்தனர். இருப்பினும், எமது அரசாங்கத்துக்கு அவர்களை உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க எமது அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லாதிருந்தது. இப்போதும் அது இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.