அம்புலன்ஸ் மின் கம்பத்துடன் மோதியதில் 5,000 வாடிக்கையாளர்கள் இருட்டில்!
கிட்டத்தட்ட 5,000 ரொறொன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் வியாழக்கிழமை இரவு மின்சாரம் இன்றி விடப்பட்டனர். அம்புலன்ஸ் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதால் மின்வயர்கள் அறுக்கப்பட்டு நகரின் மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இரவு 11மணியளவில் வெஸ்ரென் வீதி அருகில் பிராட்ஸ்ரொக் தெருவில் நடந்தது.
அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி சாதாரண காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 5,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்ததாகவும் ரொறொன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளது.
அதிகாலை 5-மணியளவில் இருட்டில் தவித்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் மீண்டும் மின்சாரத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.