அம்பர் எச்சரிக்கை? வீட்டிற்கு வெளியே நான்கு வயது சிறுமியுடன் கார் திருட்டு!
ரொறொன்ரோ- நோர்த் யோரக் குடியிருப்பில் வாகனம் ஒன்று உள்ளே இருந்த நான்கு வயது சிறுமியுடன் திருடப்பட்டதனால் அம்பர் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு நிற 2008 ரொயொட்டா கம்ரி ஒன்று ஜேன் மற்றும் லோறன்ஸ் அவெனியுவிற்கு அருகில் றொமன்வே கிறசென்டில் காலை 6 மணியளவில் இயக்கத்தில் இருக்கையில் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நான்கு வயதுடைய Christina Nyuyen கார் இருக்கை ஒன்றில் வாகனத்திற்குள் இருந்துள்ளாள்.
“இச்சம்பவம் ஒரு குற்ற வாய்ப்பாக இருந்திருக்கலாம் என தெரிகின்றது”..சிறுமியை காரிற்குள் இருத்திவிட்டு பெற்றோர் ஒருவர் மற்றய பிள்ளையை எடுக்க வீட்டிற்குள் சென்றதாக கான்ஸ்டபிள் டேவிட் ஹொப்கின்சன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி பெற்றோர் அநாதரவாக காரிற்குள் விட்டு விட்டதாக நினைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
சிறுமி 3அடி உயரம் கறுப்பு நிற தோள் நீள முடி மற்றும் பிறவுன் நிற கண்கள் கொண்ட தோற்றமுடையவள். கடைசியாக காணப்பட்ட போது ஒரு சிவப்பு நிற ஜக்கெட் றோஸ் நிற காற்சட்டை மற்றும் ஒரு வெள்ளை நிற தொப்பி அணிந்திருந்தாள்.
இச்சம்பவத்தில் குடும்ப பிரச்சனை விளையாடி இருக்கலாம் என தாங்கள் நம்பவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் 9-1-1ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
வாகனத்தின் உரிம தகட்டு இலக்கம் #BHBH392.
அம்பர் எச்சரிக்கை காலை 7.30மணியளவில் வெளியிடப்பட்டது.