அமெரிக்கா தொடக்க பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்நாடினோ தொடக்க பள்ளியிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதில் 2 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்து மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், அவர்களின் நிலைமை குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் வகுப்பறையில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு ஒரு கொலை-தற்கொலை தாக்குதல் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாக்குதலை தொடர்ந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பள்ளி தற்போது பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.