அமெரிக்காவில் ‘விவேகம்’ படத்தின் மொத்த ஓட்டத்தின் மூலம் வந்த வசூலை, ‘மெர்சல்’ படத்தின் 2 நாள் வசூல் கடந்திருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், அமெரிக்காவில் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. ‘விவேகம்’ படத்தின் மொத்த அமெரிக்க வசூலை, ‘மெர்சல்’ படத்தின் இரண்டு நாள் வசூல் கடந்துவிட்டது. அமெரிக்காவில் ’விவேகம்’ மொத்தமாக 5,22,091 டாலர்கள் வசூலித்திருந்தது. இதனை 2 நாட்களில் 5,40,745 டாலர்கள் வசூலித்து ‘மெர்சல்’ கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
‘கத்தி’ மற்றும் ‘தெறி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘மெர்சல்’ திரைப்படமும் 5 லட்சம் டாலர்களை கடந்து வசூலித்திருக்கிறது. ‘கத்தி’ படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் கடந்துள்ளதால் விரைவில் ‘தெறி’ படத்தைப் போல 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை புரியும் என்று எதிர்நோக்கியுள்ளார்கள். தற்போது 6,53,815 டாலர்களை தாண்டியுள்ளது ‘மெர்சல்’ வசூல்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ‘மெர்சல்’ முதல் நாள் வசூலில் சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.