அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, பலர் படுகாயம்!
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள Austin நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் Austin நகர பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 30 வயதான பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் அந்நகரின் வெவ்வேறு பகுதியில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிசார் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதல் நடந்த downtown பகுதியை விட்டு பொதுமக்கள் விலகி இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியான போதும், பலர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டிருப்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Austin Police Dept ✔@Austin_Police
Update: separate shootings within the same area. Both scenes are secure at this time. PIO responding to identify staging area.
Austin Police Dept ✔@Austin_Police
Active shooter incident downtown, multiple victims. Stay away from downtown. Media: Dont call for updates at this time, more to follow. PIO6