அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 16க்கும் மேற்பட்டோர் காயம்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள இரவுநேர கேளிக்கைவிடுதியில் இடம்பெற்று துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 16க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோர்ட் மைஸ் நகரத்தில் உள்ள கிளப் ப்ளூவிலே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கிளப்பில் இடம்பெற்ற இளம்வயதினருக்கான இரவு பார்ட்டி நிகழ்வின் போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, சம்பவத்தின் போது சுமார் 30ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பலர் ஒரு குழுவாக இணைந்தே இத்தாக்குதலை நடத்தியதாக தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பாக பொலிசார் மற்ற இரண்டு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.