அமெரிக்காவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதல்!
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 தொடரின் 2 போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளது.
அமெரிக்காவில் கால்பந்து, பேஸ்பால் போன்ற விளையாட்டுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டுக்கு சொல்லிக் கொள்ளும் அளவு ரசிகர்கள் இல்லை.
கடந்த வருடம் நம்பரில் அமெரிக்காவில் சச்சின்- வார்னே நடத்திய ‘ஆல் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் சிலப் போட்டிகளும் அங்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதி நடக்கும் இந்த டி20 போட்டிகள் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்டு பார்க் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இந்த டி20 போட்டிகளை பார்க்க அமெரிக்க ரசிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.