அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதியில் நடந்த விபரீதம்!
அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வந்துள்ளது சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதி. இளைஞர்கள் இளம்பெண்களின் வினோத ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் வைகையில் குறித்த கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்துள்ளது.
குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் இந்த கேளிக்கை விடுதியானது கடந்த புதன் அன்று எதிர்பாராத தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த கேளிக்கை விடுதியானது முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தின் காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை, இருப்பினும் இது சதி செயல் அல்ல என குறித்த கேளிக்கை விடுதியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக குறிப்பிட்ட கேளிக்கை கூடுகை எதுவும் இங்கு நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆள் அபாயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.