அப்போ இங்கிலாந்தில்.. இப்போ அவுஸ்திரேலியாவில்..! கலங்கடித்த தென்ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி அசத்தியுள்ளது தென்ஆப்பிரிக்கா.
அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்தது. இதில் பந்துவீச்சில் மிரட்டிய தென்ஆப்பிரிக்கா அவுஸ்திரேலிய அணியை 177 ஓட்டங்களால் வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் சந்தித்த தோல்வி இதுவாகும்.
அப்போது இதே மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணி 309 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.
தற்போது அதே அணியால் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தோற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ராபடா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதனால் அவரை கொண்டாடி வருகிறார் அணித்தலைவர் டுபிளசி.
2வது இன்னிங்சில் அவர் 5வது விக்கெட்டை கைப்பற்றும் போது அவரை கட்டியணைந்து முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவரை கூடவே அழைத்துச் சென்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதேபோன்று 2008ல் லீட்சில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகளால் வீழ்த்தியது. அப்போது ஸ்டெய்ன் பந்துவீச்சில் மிரட்டினார்.
அந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டெய்னை டிவில்லியர்ஸ் முத்தம் கொடுத்து பாராட்டினார்.