அபாயகரமான விபத்தை ஏற்படுத்திய குறைந்த வயது சாரதி.
கனடா-14வயது வாலிபன் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட அபாயகரமான விபத்தில் வாகனத்திற்குள் இருந்த 13வயது பெண் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் செவ்வாய்கிழமை அதிகாலை 4.15மணியளவில நடந்துள்ளது. 14வயதுடைய சாரதி மீது மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாலை நேரம் நடந்ந விபத்து Hurontario வீதியில் வடக்கே ஹைபொயின்ட் சைட் வீதியில் நடந்துள்ளது.கலிடோன் பகுதியான இப்பகுதி ரொறொன்ரோ டவுன் ரவுனில் இருந்து 60கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ளது.
வாகனம் வடக்கு நோக்கி சென்று கொண்டிருக்கையில் திடீரென திசை மாறியதால் மின்கம்பம் ஒன்றுடன் மோதி வேலி ஒன்றையும் நொருக்கி நுழைந்துள்ளது. பின்னர் ரொயொட்டா SUVஆன குறிப்பிட்ட வாகனம் Teen Ranch Canada முகாமை குறிக்கும் செங்கல் தூணுடன் மோதியுள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட நபர் முகாமை சேர்ந்தவரல்ல. விபத்து நடந்ததால் முகாம் மூடப்பட்டது.
விபத்திற்குள்ளாகிய வாகம் திருடப்பட்ட ஒரு வாகனம் என கூறப்படுகின்றது.சட்டப்படி வாகனம் செலத்துவதற்கு மிகவும் குறைந்த வயதுடைய வாலிபன் வாகனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.