அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு கனடாவில் கடந்த பத்தாம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளமை ஈழத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும்.
இந்த நிகழ்வுக்கு நானும் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மக்களின் எழுச்சிகரமான வருகையின் மத்தியில் அனைத்துலக தமிழர் பேரவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் கனடியத் தமிழர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டமை மற்றும் ஒரு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரும் செய்தி.
ஒரு அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகின்ற ஒரு நிலைமை உருவாகிய போது திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் அரசியலில் இருந்தும் மக்கள் பணியில் இருந்தும் ஒதுங்கி விடாமல் அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பினை உருவாக்கி இருப்பது இவர் அது தனித்துவமான வெற்றி.
கனடிய தேசத்தில் அதே போல புலம்பெயர் தேசத்தில் வழி தவறி செயற்படுகின்ற சில அமைப்புகளுக்கு இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கின்ற சில அமைப்புகளுக்கு அனைத்துலக தமிழர் பேரவையின் வருகை விழிப்பையும் எச்சரிக்கையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது என்னுடைய பார்வையாக உள்ளது
ஊடகப் போராளி கிருபா பிள்ளை