முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த பொருளாதார ரீதியான முடிவுகள் தற்போதைய அரசாங்கத்தை வெகுவாக பாதித்துள்ளது.
அப்போதைய அரசாங்கத்தின் முடிவுகளால் ஏற்கனவே நட்டமடைந்த விவசாயிகள் தற்போது விவசாயத் துறையிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது அதனை குறைத்திருக்கலாம்.
மேலும், பல விவசாயிகள் வேறு வேலைவாய்ப்புக்களை நாடி வெளிநாடுகளுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இது போன்ற காரணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கத்தில் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளன.